மாணவர்களை காவு வாங்கும் டெங்கு: மதுரையில் பீதி

மதுரை மாவட்டம் மேலூர், வாடிப்பட்டி பகுதியில் பலி வாங்கும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல், தற்போது மதுரை நகரிலும் பரவ துவங்கியுள்ளது.
மதுரையில், டெங்கு, மர்ம காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம், குழந்தை பர்ஹானாவும், செப்டம்பரில் ராஜப்ரியாவும், 9, டெங்கு காய்ச்சலுக்கு பலியாயினர்.காய்ச்சலுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள்.
இந்நிலையில், நேற்று செல்லூர் மீனாம்பாள்புரத்தில்,
பாண்டித்துரை என்பவரது மகள் தனுஷா, 5, "டெங்கு&' காய்ச்சலுக்கு பலியானார். தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்த இவருக்கு, இரு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. ரத்தப் பரிசோதனையில், "டெங்கு&' இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அங்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, தனுஷாவை தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்ற நிலையில் அவர் இறந்தார். இதைதொடர்ந்து, மீனாம்பாள்புரத்தில் சுகாதார நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இதனிடையே மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஆதனூரைச் சேர்ந்த ராமர் மகன் அஜய், 14. டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். அங்குள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவருக்கு, ஒரு வாரத்திற்கு முன்பு, தீவிர காய்ச்சல் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதித்த போது, "டெங்கு&' இருப்பது தெரியவந்தது. தனி வார்டில் வைத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அஜய் இறந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...