விபத்தில்லா தீபாவளி: ஆட்சியர் வேண்டுகோள்

தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
÷அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ÷பட்டாசு வெடிக்கும்போது
அதில் உள்ள கந்தக-டை-ஆக்ûஸடு, நைட்ரஜன்-டை-ஆக்ûஸடு, கன உலோக ஆக்ûஸடு மற்றும் மிதக்கும் நுண்துகள்கள் காற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
÷இதனால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
÷125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் வெடிகளால் செவிகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ÷மேலும் வெடிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் ஆடைகள் வாங்க கொடுத்து உதவினால் பலன் தரும் என கூறிய அவர் கீழ்கண்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
÷அதிக ஒலி மற்றும் ஒளி தரும் பட்டாசுகளை வெடிப்பது, உச்சநீதிமன்றம் மற்றும் ஒலி மாசு குறித்த விவரம் குறிப்பிடாத பட்டாசுகளை வாங்குவது, அதிக குப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை வாங்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
÷குடிசை மற்றும் அடுக்குமாடிப் பகுதி, போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் பட்டாசை வெடிக்கக் கூடாது.
÷உற்சாகத்துடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடி சுற்றுச்சூழலைக் காக்க அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...