19 நாட்கள் தொடர்ந்து விடுமுறை நாட்களை, சனிக்கிழமைகளில் ஈடுகட்டப்படும்!!!

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு பின்னர் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு 19 நாட்கள் தொடர்ந்து விடுமுறைவிடப்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் விடுமுறைவிடப்பட்டது
. மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் சில நாட்கள் விடுமுறைவிடப்பட்டது.

இந்த விடுமுறையை ஈடுகட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் வருகிற சனிக்கிழமை தோறும் பள்ளிகள் நடத்த தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் சில தனியார் பள்ளிகளில் வழக்கமாக மாலை 3-45 மணிவரை தான் வகுப்புகள் நடத்தப்படும். அந்த பள்ளிகளில் ஒரு மணிநேரம் கூடுதலாக அதாவது 4-45 மணிவரை வகுப்புகள் நடத்த இருக்கிறார்கள். இது குறித்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...