24பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 பிற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு தொடர் மழை காரணமாக சென்னை, புறநகர்
பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டது.
 அதன் பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் வியாழக்கிழமைதான் திறக்கப்படுகின்றன.
 இதனைத் தொடர்ந்து, மழைக்கால கோட் அல்லது குடை, காய்ச்சிய குடிநீர் ஆகியவற்றை மாணவர்கள் எடுத்துவர வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பியுள்ளன.
 விடுமுறை அளிக்கப்பட்டுள்ள
 24 பள்ளிகள் குறித்த விவரம்:
 அரசுப் பள்ளிகள்:
 1. அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம்.
 2. அரசு மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி.
 3. அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, ஆசிர்வாதபுரம், பிராட்வே.
 4. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
 5. அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
 6. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
 அரசு உதவிபெறும் பள்ளிகள்:
 7. ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
 8. ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
 9. மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி. எழும்பூர்
 10. கோட்டி எம்.அப்புச்செட்டி உயர்நிலைப்பள்ளி. ஓட்டேரி.
 11. புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.
 அரசு - அரசு உதவி பெறும் தொடக்க,
 நடுநிலைப் பள்ளிகள்:
 12. அரசு தொடக்கப் பள்ளி. சிட்கோ நகர், வில்லிவாக்கம்.
 13. அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி, சாலிகிராமம்.
 14. திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.
 15. அட்வெண்ட் கிறிஸ்டியன் தொடக்கப்பள்ளி. வேளச்சேரி.
 16. சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
 17. புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி, சின்னமலை.
 18. புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு.
 19. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, ஆயிரம் விளக்கு.
 மாநகராட்சிப் பள்ளிகள்:
 20. சென்னை நடுநிலைப் பள்ளி, அரும்பாக்கம்.
 21. சென்னை தொடக்கப் பள்ளி, கோயம்பேடு.
 22. சென்னை தொடக்கப் பள்ளி, பஜார் சாலை, சைதாப்பேட்டை.
 23. சென்னை நடுநிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்.
 24. சென்னை நடுநிலைப்பள்ளி. திடீர் நகர். சைதாப்பேட்டை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...