பீகாரில் முழு மது விலக்கு வருகிறது!

பீகாரில் வரும் ஏப் .1 முதல் பூரண மது விலக்கு செய்ய மாநில முதல்வர் நிதீஷ்குமார் முடிவு செய்துள்ளார் . பீகாரில் சட்டசபை தேர்தல் முடிந்து அமோக வெற்றி பெற்று லாலு- நிதீஷ் கூட்டணி ஆட்சி கட்டிலில் அமர்ந்துது.



தேர்தல் நேரத்தில் நிதீஷூக்கு பெண்கள் பெருவாரியான ஆதரவை அளித்தனர். தேர்தல் நேரத்தில் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் கவலைப்படும் மது விலக்கு மாநிலத்தில் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார் . இதனையடுத்து முதல்வராக பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் மது விலக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் .


இதன்படி வரும் 2016 ஏப்ரல் 1 ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு மது விலக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இது பீகார் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .


மதுவுக்கு எதிரான போராட்டத்தை துவக்கிய பெண்களுக்கு நிதீஷ்குமார் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...