மீண்டும் மிரட்டுது புயல்: என்ன ஆகும் சென்னை?

ஏற்கனவே துவம்சம் செய்த மழை, வௌ்ளத்தில் இருந்து சென்னை நகரமும், தமிழகத்தின் மற்ற கடலோர மாவட்டங்களும் மீளாத நிலையில், இன்னொரு புயல் சென்னையை உலுக்கப் போகிறது.


நவ.13க்குப் பிறகு சென்னை, கடலுார், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் பெய்த கடும் வௌ்ளப் பெருக்கை ஏற்படுத்தியது. குறிப்பாக பெருநகர் சென்னை தான் மோசமாக பாதிக்கப்பட்டது. சென்னையின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மிதந்தன. இன்னமும் அந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீளவில்லை. சில இடங்களில் மெதுவாகத் தான் வௌ்ளம் வடிந்து வருகிறது.

இன்னொரு புயல்: இந்நிலையில் புதிதாக அந்தமான் கடல் பகுதியில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என அமெரிக்க பருவநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தனது எச்சரிக்கையில் அம்மையம் கூறியுள்ளதாவது:

அந்தமான் அருகே தோன்றியுள்ள புயல் சின்னம் இரண்டாக பிரிந்து, ஒன்று இலங்கை நோக்கி செல்லும். இன்னொன்று வடக்காக நகர்ந்து தமழகத்தை நோக்கி வரும்.

இந்த இரண்டு சின்னங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து, இலங்கை - தமிழகம் இடையே மையம் கொள்ளும். இரண்டும் ஒன்று சேர்ந்த பிறகு, வலுவடைந்து அங்கேயே 'அமர்ந்து' விடும்.

மீண்டும் இது இரண்டாக பிரியும். ஒன்று 'போனால் போகிறது' என தமிழகத்தை விட்டு விட்டு, ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி வடக்கு, வடகிழக்காக பயணிக்கும்.

ஆனால் இன்னொன்று, தமிழகத்தை பிரிய மனமில்லாமல், சென்னைக்கு அருகிலேயே சில நாட்களுக்கு 'தங்கும்'. அப்போது தான் சென்னையை பலத்த மழை தாக்கும். அதுவும் எப்படி? சென்ற வாரம் பெய்த மழையை விட பல மடங்கு வேகமாக காற்றுடன் பெய்து தள்ளும். பல இடங்களில் வௌ்ளம் வீரிட்டு வர வாய்ப்பும் ஏற்படும்.

டிச.6 வரை இந்நிலை நீடிக்கலாம். அதன் பிறகே மழை குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல், தற்போது சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...