தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் 2 நாள் முகாம்!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு, மே மாதத்திற்குள், சட்டசபை பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில், அதிகாரிகள், 9ம் தேதி சென்னை வருகின்றனர்; அன்று மாலை, புதுச்சேரி புறப்பட்டு செல்கின்றனர். மறுநாள் 10ம் தேதி, அங்கு ஆய்வு நடத்திவிட்டு, மாலை, சென்னை
திரும்புகின்றனர்.சென்னையில், மாலை, 6:00 மணி முதல், 7:30 மணி வரை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித்
தனியே சந்தித்து, கருத்து கேட்கின்றனர்.மறுநாள், 11ம் தேதி காலை, 10:00 மணியில் இருந்து, 1:00 மணி வரை, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள், மாநகராட்சி கமிஷனர்கள் ஆகியோருடன், தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசிக்கின்றனர்.அன்று மாலை, 3:00 மணிக்கு, தலைமைச் செயலர், டி.ஜி.பி., உள்துறைச் செயலர், வருமான வரித்துறை கமிஷனர், கலால் துறை கமிஷனர் மற்றும் மாநில உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்துகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...