6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிக்
கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன் விவரம்:
*பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 11ல் தேர்வு துவங்கி மார்ச், 31ல் முடிகிறது
* 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு, ஏப்., 5ல் துவங்கி, ஏப்., 21ல் முடிகிறது
* 9ம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வை, மார்ச், 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
*பிளஸ் 2வுக்கு, செய்முறை தேர்வை, பிப்., 5ல் துவங்கி, 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது
*10ம் வகுப்புக்கும், பிப்., இறுதிக்குள் செய்முறை தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தர அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்., 13ல் முடிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...