வரலாறு காணாத வெள்ள பாதிப்புக்கு, அதிகபட்ச மழை காரணமல்ல'!

சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்புக்கு, அதிகபட்ச மழை காரணமல்ல' என, மத்திய புவியியல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், வடகிழக்கு பருவமழை காலமான, 2015 நவ., --- டிச., மாதங்களில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், நீர் நிலையை ஆக்கிரமிக்காமல், முறையாக
அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்த வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.சென்னையை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்த தமிழக அரசு, 'இந்த பாதிப்பை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.


புகார்:

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழு, நேரில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. 'செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் ஏற்பட்ட குளறுபடியே இந்த பாதிப்புக்கு காரணம்' என, பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். ஆனால், தமிழக அரசு இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

அறிக்கை:

இந்நிலையில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின், 2015க்கான பருவநிலை அறிக்கையில், சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 'சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல; மோசமான வடிகால் வசதிகள், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டதே காரணம்' என்று, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.



நடவடிக்கை இல்லை :


அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:
* 'பெருமழை பெய்யும்' என, 48 மணி நேரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை
* ஒடிசா, குஜராத் மாநில அரசுகள் போல, தமிழக அரசு, பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த பாதிப்பை தவிர்த்து இருக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.


Advertisement
நெருக்கடி:

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'சென்னை வெள்ளத்துக்கு மழை காரணமில்லை' என, பார்லி மென்டில் தெரிவித்தார். இந்நிலையில், மத்திய புவி அறிவியல் அமைச்சக ஆய்வறிக்கை, தமிழக அரசின் நிலைபாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

திட்டமிட்டு செயல்பட்டிருந்தால்... :
'வட கிழக்கு பருவமழை காலத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், 111 சதவீத மழை பெய்யும்' என, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தெருக்களில், மக்கள் அல்லல்பட்டனர்; இதற்கு, மழை காரணம் என்று கூறுவது தவறு. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதே இதற்கு காரணம். ஏரி திறப்பில் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், இந்த பாதிப்பை தவிர்த்திருக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் பேரிடர் மேலாண்மை தொடர்பான முன் தயாரிப்பும், முறையான வடிகால் வசதிகளும் இல்லாததே இத்தகைய பாதிப்பிற்கு வழிவகுத்துள்ளன. புவி அறிவியல் துறை உயர் அதிகாரி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...