தேர்வர்கள் வாடிக்கையாளரா? பல்கலை அறிவிப்பால் அதிர்ச்சி!

உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வான, 'செட்' தேர்வு, பிப்., 21ல் நடக்கவுள்ளது. அரசு சார்பில், அன்னை தெரசா பல்கலை இந்த தேர்வை நடத்த உள்ளது. செட் தேர்வு அறிவிப்பு வெளியானது முதல், பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், செட் தேர்வு விண்ணப்பதாரர்களின் வழிகாட்டுதலுக்காக, தனி மையம்
அமைக்கப்பட்டு, இணையதளத்தில் அதற்கான மொபைல் போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில், 'வாடிக்கையாளர் உதவிக்கு' என்ற பொருளில், 'கஸ்டமர் சப்போர்ட்' என குறிப்பிட்டு உள்ளனர்.
இது குறித்து, முதுகலை பட்டதாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே, செட் தேர்வு முடிவுகளில், பல்கலைகள் மற்றும் மாநில உயர் கல்வி அதிகாரிகளின் தலையீடு உள்ளதாக, சந்தேகம் உள்ளது; தேர்வு நடைமுறையிலும் குழப்பம் உள்ளது. இந்நிலையில், தேர்வர்களை, 'வாடிக்கையாளர்' என, குறிப்பிட்டுள்ளதன் மூலம், தேர்வு முடிவுகள் விற்பனை செய்யப்படுமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, நியாயமான தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...