உரிமைக்காக போராடும் SSTA, மறியல் போரில் இல்லை. ( துரோகி யார்?) ஏன் ? ஏன்? ஏன்?

> SSTA ல் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும்  மிக கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.

> 2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு மாவட்ட மாறுதலே இல்லை என்று நியமன ஆணையிலேயே குறிப்பிட்டுத்தான் பணிநியமனம் வழங்கப்பட்டது.

> பல்வேறு  வறுமை சூழலிலும் இடைநிலை ஆசிரியர்களின் நலன் கருதி SSTA தனித்து நின்றே  உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட மாறுதல் உரிமையை வென்று உரிமை பெற்று தந்தது...

> மற்றொரு பாதிப்பு,  மாநில அரசு மற்றவர்களுக்கு வழங்கிவரும் ஊதியத்திற்கு இணையான ஊதியமே  எங்களுக்கு இல்லை.இதனால் இதுவரை இழப்பு-4,70,189

> இதை கேட்க இங்கே யாருமில்லை.

> SSTA இயக்கம் தொடங்கி 4 ஆண்டுகளில், தமிழகத்தின் பெரிய இயக்கங்களும்  இதுவரை காணாத உச்சநீதிமன்ற சாதனையை SSTA நிகழ்த்திக் காட்டியது.40 ஆண்டுகளில் செய்தவற்றை 4 ஆண்டுகளில் தனித்து செய்துள்ளது.


> இடைநிலை ஆசிரியர்களுக்காக,  தற்போதைய  ஆட்சி அமைந்த நேரத்தில் கூட,  தனித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தியது SSTA.

> உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்காக மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்தது SSTA மட்டுமே!

 > டிட்டோஜாக் அமைப்பை ஏற்படுத்தி,  போராடுவோம் என்று அனைத்து தொடக்கக்கல்வி இயக்கங்களுக்கும் கூடியபோது,  இரண்டாண்டுகளுக்கு முன் முதலில் அழைப்பு விடுத்தோம்.

>  ஜாக்டோ அமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் போராட்டத்திற்கு தயாராக இருப்பவர்கள் வரலாம் என்றார்கள்.

> SSTA (22.03.2015) அன்று ஜாக்டோ  கூட்டத்திற்கு நேரில் கலந்து கொண்டது.

> பள்ளிகல்வித்துறையில் அன்று புதிதாக வந்த இயக்கங்கள் அனைத்தும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

> ஆனால் தொடக்கக்கல்வித்துறையில் 7 டிட்டோஜாக்கில் உள்ள இயக்கங்களை தவிர மற்ற இயக்கங்கள் சேர்க்கப்படவில்லை.

> அப்படிச் சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என  இரண்டு இயக்க பொதுச்செயலாளர்கள் ஜாக்டோ அமைப்பாளர்களிடம் தெரிவித்தனர்...

> SSTA இயக்கத்தை சேர்க்காவிடினும் பரவாயில்லை.  30,000 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரே அவர்கட்கு  குறைந்தபட்சம்  மாநில அரசுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கையை வையுங்கள், இணையதளம் முழுமையும் பயன்படுத்தி அதன் மூலம் அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக வாக்களித்தோம். அதுவும் நிராகரிக்கப்பட்டது...

>  இன்றைக்கும்,  தமிழகத்தில் உள்ள இயக்கங்களில் இணையதளம், வாட்ஸ்அப், முகநூல் என அனைத்திலும் முதலில் இருப்பது SSTA....

> இப்போதைய  போராட்டம் திருமண நிகழ்ச்சியல்ல என்று நாங்களும் அறிவோம்.

> இழவு வீடாக இருந்தாலும், மற்றவர்கள் உள்ளே வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என பாரபட்சம் பேசியது  யார் குற்றம் ?                                                                                                                   >எப்படி ( எத்தனை)  தடைகள் வந்தாலும் இடைநிலை ஆசிரியர்கள் இழந்த ஊதியத்தினை பெறாமல் SSTA ஓயாது...

> ஜாக்டோவின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களே,ஆசிரியர்களே, தலையை தண்டவாளத்தில் வைத்து போராடவும் தயாராக உள்ளது SSTA ...

> இதில் தவறு யார் மீது???

> எங்கள் மீது தவறு என்றால் திருத்திக்கொள்கிறோம்...

> முடிவு உங்கள் கையில் ..                                                                                                             > இதுவரை நடந்த அத்தனைப்போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளோம்,கடைசியாக நடந்த இரண்டைத்தவிர

> போராட்டத்திற்கு அஞ்சுபவர்கள் அல்ல எங்கள் தலைவர்களும்,உறுப்பினர்களும்...

> உரிமைக்கு உயிர் தரவும் தயாராக உள்ள உறுப்பினர்கள்  கொண்ட இயக்கம் எங்கள் இயக்கம்...

> வெற்றி பெறும்வரை போராடுவோம்... தொய்வின்றி...

> அந்த உணர்வு எங்கள் இரத்தத்தில்
 ஊறிய ஒன்று.

"முதல் வெற்றி நமக்கே"..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...