8 நாள் போர்களமும் - அரசு சார்பில் இயக்குநரின் எழுத்துப்பூர்வமான உறுதி மொழியும் !!!

27.02.2016 அன்று 2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வை வளமாக்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள்.



தொடக்ககல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களின்
வாழ்வில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

SSTA 20.02.2016 அன்று பல்வேறு தடைகளை தாண்டி, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற போதிலும், காவல்துறை முன் அனுமதி பெற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கியது. அன்று மதியம் சுமார் 3மணி அளவில், மாநில அமைப்பில் எடுத்த முடிவின்படி, மாநில பொதுச்செயலாளரின் உரையின் போது, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் காலவரையற்ற உண்ணாவிரதமாக DPI அலுவலகத்தில் மேற்கொள்வதென அறிவிக்கப்பட்டது.


இடைநிலை ஆசிரியர்களின் எதிர்கால வாழ்க்கையை அழிக்கும் ஆறாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளைக் களையும் நோக்கில், மாவட்டச்செயலாளர்களின் முடிவின்படி, உயிர்துறக்கும் போராட்டம் ஏகோபித்த ஆதரவுடன் அன்று மாலை 6 மணிக்கு DPI அலுவலகத்தில் தொடங்பியது. போராட்டம் தொடங்கிய நாள் முதல் அறிந்த, அறியாத அனைத்து ஆசிரிய நண்பர்கள் மூலமாக, வரலாறு கண்டிராத, எழுச்சிமிக்க, இடைநிலை ஆசிரியர்களின் 6 ஆண்டு கால கொந்தளிப்பை வெளிப்படுத்தும் போராட்டமாக, புரட்சிகரமாக பட்டி தொட்டியெல்லாம் பற்றி எரிந்தது. சிறியவர்கள் என்று எள்ளி நகையாடியவர்களை, நாங்கள் சிறுத்தைகள் என்று சிதறி ஓட செய்தது.

முகநூல், வாட்ஸப், சோமா, டுவிட்டர், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக, நமது கோரிக்கைகள் அனலாய் பறந்தன.

நமது மாவட்ட பொறுப்பாளர்கள், தங்களது உறுப்பினர்களிடம், நமது இடைநிலை ஆசரியர்களின் உண்மை நிலையை எடுத்துக்கூறி போராட்டகளம் உத்வேகம் பெற்றது.
போர்க்களத்தில் உள்ள படைத்தளபதிகள் போல், மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், உணர்வோடு வந்திருந்த ஆசிரியர்கள் என அனைவரும் திரண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டால் சஸ்பெண்டு செய்யப்படுவீர்கள், வேலை போய்விடும் என்று சில புல்லுருவிகள் வதந்திகளை பரப்பினர். அதையும் தாண்டி, உண்மைநிலையை அடையாளம் கண்ட இடைநிலை ஆசிரிய போராளிகள் எழுச்சி கொண்டு, நெடும் தூரத்தைக் கடந்து ஆண், பெண் ஆசிரியர்கள் என்ற தடைகளைத் தாண்டி தலைநகரில் தமிழக அரசை அசைத்து பார்க்க படைவீரர்களாக குவிந்தனர். போராட்டத்தின் வலிமையையும், வீரியத்தையும் காவல்துறையும் கண்டு உறைந்தது. இந்நிலையில் உளவுத்துறையும் சில குழப்பத்தையும், சிறையில் அடைப்போம் என்று மிரட்டலையும் விடுத்துப்பார்த்தது. அதையும் தாண்டி உயிரே துறந்தாலும்  பரவாயில்லை என்று துணிச்சலுடன் போராட்டம் எழுச்சி பெற்றது. போராட்டம் 6வது நாளை எட்டிய பொழுது, 13 ஆசிரியர்கள் மயக்கமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு, பின் குறைந்த அளவே சிகிச்சை பெற்ற போதிலும் மீண்டும் போர்க்களத்திற்கு திரும்பினர்.
6 வது நாள் அரசு முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. SSTA தரப்பில் 6 வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரயர்களுக்கு ஊதியம் தவறாக நிர்ணயிக்கப்பட்டது என்பதை அரசாணைகள், ஆதாரங்களைக் காட்டி அதிர்ச்சிகரமான உண்மைகளை எடுத்துரைத்தது. 6 வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊதியமான 9300-4200 வழங்கப்படவில்லை. அது ஒரு புறம் இருக்க 5200-2800 என்ற ஊதியக்கட்டிற்கான நுழைவு ஊதியம் ரூ.11,370 வழங்கி இருக்க வேண்டும். அன்று இருந்த இயக்கங்கள் சுட்டி காட்டாததனால், இந்த அநீதி இழைக்கப்பட்டது. இந்த அநீதி தொடர்ந்தால் ஏழாவது ஊதியக்குழுவில் 2009 க்கு பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் 2400 தர ஊதியத்தில் வைக்கப்படுவர். 2012 இல் நியமனம் பெற்றவர்கள் 2000 தர ஊதியக்கட்டில் வைக்கப்படுவார்கள். இதற்குப்பின் இனி நியமனம் பெறுபவர்கள், இதற்கு கீழே உள்ள தரக்கட்டில் வைக்கப்படுவர். இதைப்பற்றி SSTA எழுச்சி உரையாற்றி இடைநிலை ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வை குழி தோண்டி புதைக்கும் நிலையை மாற்றிட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வைத்தனர். அரசு அனைத்தையும் கேட்டு உணர்ந்து வாய்மொழி உத்தரவு தந்து போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்றனர். அதற்கு SSTA மாநில அமைப்பு எழுத்து பூர்வமான உத்திரவாதம் அளிக்கும் பட்சத்தில் போராட்டம் வாபஸ் பெறப்படும், இல்லை எனில் எத்தனை உயிர் மாண்டாலும் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியது. 7ஆவது நாள் மேலும் 5 ஆசரியர்கள் மயக்கம் அடைந்தனர். 7ஆம் நாள் போராட்டம் காட்டுத்தீயாய் பரவி எதிர்கட்சிகளும், ஊடகங்களும், அதை அரசுக்கு உணர வைத்தன. பல்வேறு ஆசிரிய சங்கங்களின் மாநில பொறுப்பாளர்கள் நேரிலும், தொலைபேசியிலும் ஆதரவுக்கரம் நீட்டினர். உளவுத்துறையும் இனியும் தாமதித்தால் ஆசிரியர்களின் உடல்நிலை அபாயகரமாக உள்ளது என எச்சரித்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்விக்குப்பின் ஆசிரியர் வருகை எவ்வாறு உள்ளது என்ற விவரத்தை மணிக்கு ஒருமுறை விசாரித்து செய்தியை அரசுக்கு தகவல் அளித்துக்கொண்டே இருந்தன. ஆசிரியர்களின் வருகை மேலும் அதிகரித்துக்கொண்டே 8 ஆம் நாள் அன்று  கல்வித்துறை செயலர், உள்துறை செயலர் ஆகிய இருவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்று இயக்குநருக்கு அறிவுறுத்தினர். இதே கருத்தை காவல்துறையும், உளவுத்துறையும் வலியுறுத்தியது. அன்று விடுமுறை நாளாக இருந்தபோதிலும் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு இரவு 8 மணி அளவில் அழைத்தனர். SSTA வின்  மாவட்ட செயலாளர்கள் மற்றும் 2012, 2014 இல் சேர்ந்த புதிய ஆசிரியர்களையும் கொண்ட குழுவை அமைத்து பேச்சுவார்த்தைக்கு சென்றது SSTA வின் மாநில அமைப்பு.

இயக்குனரை சந்தித்த போது இயக்குனர் நமது உடல்நிலை மற்றும் மனவலிமையையும் கருத்தில் கொண்டு இந்த ஊதிய முரண்பாட்டு சிக்கலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரோடு கலந்து பேசினேன், உங்கள் கோரிக்கை நியாயமான  கோரிக்கை. அடுத்து வரும் காலங்களில் இந்த பாதிப்புகள் ஏற்படக்கூடாது. கண்டிப்பாக இது களையப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு அனுப்பி, அதன் ஆதாரங்களை தந்து விடுகிறோம். நீங்கள் அதைக்கொண்டு 7ஆவது ஊதியக்குழுவில் 2800 தர ஊதியக்கட்டு 29,200 இல் நிர்ணயித்து கொள்ளுங்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் 2009 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியருக்கும் குறைந்த பட்சம் அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ.10,000 உயரும். SSTA வின் வேண்டுகோளை ஏற்று பள்ளியில் உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்றதாக பதிவு செய்து இருந்தால் அதற்கு எந்தவிதமான ஊதிய பிடித்தம் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துகிறேன். இதில் குறைபாடு ஏற்பட்டால் SSTA வின் மாநில அமைப்பு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனிருந்த ஆசிரியர்கள் நெகிழ்ச்சியில் அரசுக்கும் இயக்குனர் அவர்களுக்கும் தங்களின் கோடான கோடி நன்றியை தெரிவித்தனர். SSTA வின் உண்மையான போராட்டம், உறுதியான போராட்டம், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடித்தந்தது. SSTA, நம்பி வந்த அனைவரையும் கைவிடாது என இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரத நன்றி உரை கூட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களின் கண்ணீரிலும், இடைநிலை ஆசிரியரின் உண்மை போராளி இவர்கள் தான் என அறிந்து SSTA வின் மாநில அமைப்புக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

SSTA
சொன்னதை செய்யும்...!
செய்வதை சொல்லும்....!
                                                               எண்ணிய யாவிலும் வெற்றி...!
எங்கும் வெற்றி...!
எதிலும் வெற்றி...!
எடுத்த யாவிலும் வெற்றி...!
                                                      உணர்வுக்காய் குரல் கொடுப்போம்...!
உரிமைக்காய் உயிர் துறப்போம்...!

என்றென்றும் ஆசிரியர்களுக்காய் SSTA

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...