மாநில அரசு கோடை விடுமுறையை முன்னதாகவே அறிவிப்பு !

ஒடிஸா மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகளுக்கு மாநில அரசு கோடை விடுமுறையை முன்னதாகவே அறிவித்துள்ளது. கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி வரை முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து பள்ளிகள் மூடப்படுவதாகவும் ஜூன் மாத மத்தியில் நடைபெறவிருக்கும் ராஜோ விழா
முடிந்த பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப்தா மொஹாபாத்ரா தெரிவித்தார். அவர் இது குறித்து புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பள்ளி செயல்படும் நாட்களின் இழப்பை சரிக்கட்டவும், பாடத்திட்டத்தை குறித்த நேரத்துக்குள் முடிக்கவும் கூடுதல் பாட வகுப்புகள் நடத்தப்படும். வெயிலின் தாக்கம் சிறிதும் குறையாத காரணத்தால், அரசு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது.


நாட்டிலேயே மிக அதிக வெப்பநிலை: நாட்டிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஒடிஸா நகரான தீத்லாகரில் 48.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்னதாகத் தொடங்கும்பட்சத்தில் பள்ளிகளை முன்னதாகவே திறக்க அரசு பரிசீலனை செய்துள்ளது. ஒடிஸாவில் ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் மாதம் 10ஆம் தேதி பருவமழை தொடங்கும். இந்தக் கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்குத்தானே தவிர, கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கானது அல்ல. மாநிலம் முழுவதும் கடும் வெயிலுக்கு இதுவரை 88 பேர் உயிரிழந்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இருந்தபோதிலும் கடும் வெப்பம் தாளாது 4 பேர் மட்டுமே இதுவரை உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மக்கள் உயிரிழப்பதை பேரிடராக மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதையடுத்து, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...