15 ஆயிரம் பள்ளிகளின் வாகனங்களுக்கு அனுமதி..

பள்ளி வாகன ஆய்வில், 15,235 வாகனங்கள் இயக்குவதற்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அம்ச குறைபாடுள்ள, 1,648 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

தமிழகத்தில், 24,472 பள்ளி வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும், இந்த
வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட பின்தான், இயக்கத்திற்கு அனுமதிப்பது வழக்கம்.

இந்தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்ததால், கடந்த ஒரு வாரமாக தான் ஆய்வு பணி நடக்கிறது. நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், வாகன ஆய்வை விரைவுபடுத்துமாறு, போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.



இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 28ம் தேதி வரை, 16,883 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. இதில், 15,235 வாகனங்களுக்கு மட்டும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அம்ச குறைபாடுகள் இருந்த, 1,648 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இவற்றில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டவுடன், தகுதி சான்றிதழ் வழங்கப்படும். அடுத்த சில நாட்களுக்குள், அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு விடும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...