தமிழகத்தில் இதுவரை 16,883 பள்ளி வாகனங்களில் ஆய்வு...!!

தமிழகத்தில் கடந்த மே 27-ந் தேதி வரை 16 ஆயிரத்து 883பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சத்தியப் பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் சத்தியப் பிரதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

''உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முன், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி வாகனங்களை பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படுகிறது.


மாவட்ட அளவில் வருவாய், போக்குவரத்து, காவல் மற்றும் பள்ளி கல்வித்துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு ஆய்வு மேற்கொள்கிறது.
ஆய்வின் போது, வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதிவாய்ந்த ஓட்டுனர், நடத்துனர், மாணவர்கள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் 27 ஆயிரத்து 472 வாகனங்களில் கடந்த 27-ந் தேதி வரை 16 ஆயிரத்து 883 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 971 வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 912 வாகனங்களில் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் 264 வாகனங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மறு ஆய்வு செய்யப்பட்டது. மீதமுள்ள 7 ஆயிரத்து 589 மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய ஆயிரத்து 648 வாகனங்களும் இம்மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்கப்டும்.
சென்னை தென் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 11 பள்ளிகளின் 72 வாகனங்கள் செட்டிநாடு வித்தியாஸ்ரம பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இதை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில்பார்வையிட்டார்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...