உயர்கல்விக்கு வழி இல்லை தவிக்கும் ஆட்டோ டிரைவர் மகள்:பிளஸ் 2வில் 1122 மதிப்பெண்.

பிளஸ் 2வில் 1,122 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் ஆட்டோ டிரைவர்மகள் புவனேஸ்வரி, உயர்கல்விக்கு வழியின்றி பரிதவிக்கிறார்.திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை திருநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜன் மகள் புவனேஸ்வரி.புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்௨ படித்து 1,122 மதிப்பெண் பெற்று உள்ளார்.
(தமிழ்- 187, ஆங்கிலம்- 155, புள்ளியியல்- 199, பொருளாதாரம்- 185, வணிகவியல்- 198, கணக்குப்பதிவியல்- 198). தந்தைக்கு போதிய வருவாய் இன்றி உயர்கல்விக்கு வழிதெரியாமல் தவிக்கிறார். இவரது தந்தையின் சொற்ப வருமானம் அவரது சிகிச்சை, குடும்ப செலவுக்கே போதுமானதாக உள்ளது.புவனேஸ்வரி கூறுகையில், ''கல்வி கட்டணத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. அதற்கான வருவாய் இல்லாததால் என்ன செய்வது என்றே தெரியவில்லை,'' என்றார்.இவருக்கு உதவ: 97894 -48087.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...