ஐஐடி உயர்கல்வி நிறுவனங்கள் முழுவதும் இனி ஏசி !!!

ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் இனி மாணவர்கள் ஜிலு ஜிலு ஏசி வசதியுடன் படிக்க முடியும். அடுத்த கல்வியாண்டில் (2016-17) ஐஐடி கல்வி நிறுவனங்களில் பயிற்சிக் கட்டணத்தை அரசு மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஐடி மாணவர்களுக்கு முழு ஏசி வசதியுடன் கூடிய ஹாஸ்டல்கள் அமைத்துத் தரப்படவுள்ளது. மேலும் ஹாஸ்டல்களில் நவீன சமையலறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தரவுள்ளது ஐஐடி நிர்வாகம்.
நாட்டிலுள்ள 18 ஐஐடிகளில் இந்த நவீன வசதிகள் செய்து தரப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் ஜிலு ஜிலு ஏசி வசதியை செய்து தர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் டெல்லி ஐஐடி வந்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹாஸ்டலைப் பார்வையிட்டு மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட்டார்.


அப்போது ஹாஸ்டல் சமையலறை, மாணவர் கூடுமிடம் உள்ளிட்ட இடங்களைப் பார்த்தார். மேலும் மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தற்போது டெல்லி ஐஐடி-யின் ஹாஸ்டல்களில் அனைத்து அறைகளும் ஏர் கூலர் வசதி செய்து தரப்படவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...