நேரடி மாணவர் சேர்க்கை சர்ச்சை: உயர்கல்வி செயலர் விசாரணை...

மதுரை காமராஜ் பல்கலை, தொலைநிலைக் கல்வியில், 2014 - 15ம் ஆண்டில், 1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர். இதில் பெரும்பாலான மாணவர்கள், போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ள தாக சர்ச்சை எழுந்தது இதனால், இத்தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.


பல்கலையின் இம்முடிவால், உண்மை சான்றிதழ்கள் சமர்ப்பித்து, தேர்வு எழுதிய நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்-பட்டு உள்ளனர். அவர்களின் வேலைவாய்ப்பு, மேற்படிப்பு தடைப்பட்-டு உள்-ள-து.இதுகுறித்து, நமது நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, பல்கலை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட, செயலர் அபூர்வா விசாரித்து, விரைவில் முடிவுகள் வெளியிட உத்தரவிட்டார்.

இதுகுறித்து, பல்கலை அதி-காரி ஒரு-வர் கூறுகையில், 'விரைவில் முடிவுகளை அறிவிக்க, செயலர் உத்தரவிட்டு உள்ளார். சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து,பல்கலை கமிட்டி உறுப்பினர்கள் விரைவில் விசாரிக்க உள்-ள-னர். உண்மை சான்றிதழ் சமர்ப்பித்த, 200 பேரின் தேர்வு முடிவுகளை, ஜூன் 5ல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...