ஒரே வாக்காளர் பட்டியல்: பார்லி., குழு பரிந்துரை !

பார்லிமென்ட் தேர்தல் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை, அனைத்துக்கும் ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்' என, சட்டம் மற்றும் பணியாளர் நலனுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

சட்ட அமைச்சகத்துக்கான, 2016 - 17ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு குறித்த அறிக்கை, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



தற்போது பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தல்களை மத்திய தேர்தல் கமிஷன் நடத்துகிறது. உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் கமிஷன் நடத்துகிறது.இந்த தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை, மத்திய மற்றும் மாநில தேர்தல் கமிஷன்கள் தனித்தனியாக தயாரிக்கின்றன. இவ்வாறு இரண்டு பட்டியல் தயாரிப்பதால், செலவுகள் அதிகரிப்பதுடன், நேரம் வீணாகி, தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.



அதை தவிர்க்க, ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலையே, மத்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...