தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் விண்ணப்ப விற்பனை படுஜோர்...!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. 2 நாளில் மட்டுமே சுமார் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்களை
கடந்த 2 நாள்களில் மொத்தம் 11,990 மாணவர்கள் பெற்றுச் சென்றுள்ளதாக மருத்துவக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் நடப்பாண்டில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வின்றி வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் மூலம் கணக்கிடப்படும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். சேர்க்கை நடைபெறும் வகையிலான அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்தார்.


இதைத் தொடர்ந்து சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்ப விநியோகம் மே 26-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 6,123 பேர், 2-ம் நாளில் 5,867 பேர் என மொத்தம் 11,990 பேர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்க ஜூன் 7-ஆம் தேதியும் கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் தமிழகத்தில் ஒரே விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...