நாளை முதல் துவங்கும் அக்னி; உக்கிரம் ஜாக்கிரதை !

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், நாளை துவங்கி இம்மாதம் 25ம் தேதி வரை நீடிக்கிறது.

பொதுவாக அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் சூரியன் தகிப்பான். இந்த
ஆண்டு மார்ச் மாதமே கடும் வெயில் அடிக்க துவங்கிவிட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தந்தூரி அடுப்பி்ல் இடப்பட்ட ரொட்டி போல காய்ந்து கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் 52.4 டிகிரி செலசியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தின் பல நகரங்கள் 40 டிகிரியை தொட்டுவிட்டன. இந்த வெயிலுக்கே மக்கள் அல்லாடி கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை முதல் துவங்கும் அக்னியை நினைத்தாலே பொது மக்களுக்கு கொதிக்கிறது. இந்த வெயிலை எப்படி தாங்குவதென பல்வேறு திட்டங்களை தீட்ட ஆரம்பித்து விட்டனர். பலர் வெயில் நேரத்தில் வெளியே காட்டக்கூடாது என தீர்மானம் போட்டு விட்டனர். வயதானவர்களுக்கு எதுவும் வந்துவிடக்கூடாது என அவர்களை காப்பாற்றுவது பலருக்கு பெரும்பாடாக இருக்கிறது

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், அக்னி நட்சத்திர காலத்தில், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், மோர், கரும்புச்சாறு, பதநீர், பழச்சாறு போன்ற இயற்கை பானங்கள் போன்றவற்றை அருந்தலாம். தலையில் தொப்பி கைக்குட்டையை கட்டிக்கொண்டு செல்வது நல்லது. அப்போது தான் தலையை வெயில் நேரடியாக தாக்காமல் இருக்கும் காலையிலும் மாலையிலும் இருமுறை குளிப்பது உடல் சூட்டை தவிர்க்கும் என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...