டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவியில் தொடர அரசு தடை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் செல்வமணியின் பதவியை முடக்கி வைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் செல்வமணி, 62, மீது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், 2011, அக்., 13ல் வழக்கு தொடர்ந்தனர்; விசாரணை நடந்து வருகிறது. இதை எதிர்த்து செல்வமணி,
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, செல்வமணி ஜூன், 19ல் இருந்து, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவியில் தொடர தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல ஆகஸ்ட்டில், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் ரத்தின சபாபதியும், பதவியில் தொடர தடை விதிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...