மருத்துவ படிப்பு: இன்று பொதுப்பிரிவு கவுன்சிலிங்...!

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. அழைப்பு கடிதம் அனுப்பப்படாததால், 'கட் - ஆப்' மதிப்பெண் அட்டவணைப்படி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், இரண்டு இ.எஸ்.ஐ.,
கல்லூரிகள் மற்றும் ஆறு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும்; 1,055 பி.டி.எஸ்., படிப்புக்கான இடங்களும் உள்ளன. இதற்கு, 25 ஆயிரத்து, 379 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியானது.



மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், நேற்று துவங்கியது. முதல் நாளில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் கலந்தாய்வு நடந்தது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. இன்று, 'கட் - ஆப்' மதிப்பெண், 200 முதல், 198 வரை பெற்றவர்கள் பங்கேற்கலாம். இதன்படி, இன்று, 735 பேர் பங்கேற்கின்றனர்.



இது குறித்து, மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது: கால அவகாசம் இல்லாததால், கலந்தாய்வில் பங்கேற்க தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை. 'கட் - ஆப்' மதிப்பெண் அட்டவணைப்படி, கலந்தாய்வில் பங்கேற்கலாம். இதுபற்றிய விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்; பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, மூன்று நாட்கள் நடக்கும். அடுத்த இரண்டு நாட்கள், பிற பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும். மாணவர், பெற்றோர் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.



சிறப்பு பிரிவுகளில் 69 பேருக்கு இடம் : முதல் நாளில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் என, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று நடந்தது. 159 பேர் அழைக்கப்பட்டனர்; 138 பேர் மட்டுமே பங்கேற்றனர். கலந்தாய்வு இரவு, 7:00 மணி வரை நடந்தது.இதில், மாற்றுத் திறனாளிகள் - 60; முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் - 6; விளையாட்டு வீரர்கள் - 3 பேர் என, 69 பேருக்கு இடங்கள் கிடைத்தன. இதில், 68 பேர் எம்.பி.பி.எஸ்., படிப்பையும், ஒருவர் பி.டி.எஸ்., படிப்பையும் தேர்வு செய்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...