வருகைப்பதிவு அனுப்பாமல் ஆசிரியர்கள்... டிமிக்கி! மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா?

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை பல தலைமை ஆசிரியர்கள் செயல்படுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக உள்ளதால், பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை.

இதனை கடந்த 2010ம் ஆண்டு கலெக்டராக இருந்த அமுதவல்லி கண்டறிந்து, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திட எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி துவங்கும் நேரம் முடிந்ததும் ஆசிரியர்கள் வருகை விவரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திற்கு (நிக்) மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.
இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்பாட்டினால், மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் திறன் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 2009-10ம் ஆண்டில் நுாறு சதவீத தேர்ச்சி மூன்று அரசு பள்ளிகள் மட்டுமே இருந்த நிலையில்; 2015-16ம் கல்வி ஆண்டில் 41 அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்களின் வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்புவதில் பல தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 1,078 தொடக்கப் பள்ளிகள், 346 நடுநிலைப் பள்ளிகள், 127 உயர்நிலை பள்ளிகள், 108 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 4,759 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே 215 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
இவர்களின் செயல், இத்திட்டத்தையே மழுங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளதால், மாணவர்களின் கற்றல் திறன் மீண்டும் பின்னுக்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆதலால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையில் தனிக் கவனம் செலுத்தி, ஆசிரியர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவதை உறுதி செய்திட வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...