சென்னை ஹைகோர்ட்டுக்கு மேலும் 24 கூடுதல் நீதிபதிகள்.. !

சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாதக 24 நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலை சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் வழங்கியுள்ளது.
முதல் கட்டமாக இந்த 24 பேரும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.
பின்னர் நிரந்தர நீதிபதிகளாக அறிவிக்கப்படுவர்.
30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலிலிருந்து இந்த 24 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழுவான கொலீஜீயம் தேர்வு செய்துள்ளது.
30 பேர் பட்டியல்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்து கடந்த பிப்ரவரி மாதம் 19 வக்கீல்கள், 11 மாவட்ட நீதிபதிகள் என 30 பேர் பெயர் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட்க்கு அனுப்பி இருந்தது.



24 பேருக்கு ஒப்புதல்
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் அனுப்பிய பெயர் பட்டியலில் இருந்து 24 பேரை தேர்வு செய்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

15 பேர் வக்கீல்கள்
இவர்களில் 15 பேர் வக்கீல்கள் - பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சத்ய சந்திரன், ஜிஆர்.சுவாமிநாதன், அப்துல், எம்.தண்டபானி, பி.டி ஆதிகேசவலு, வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியம், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், நிஷாபானு, எம்எஸ்.ரமேஷ், அனிதா சுமந்த், எஸ்எம்.சுப்பிரமணியம்.

9 மாவட்ட நீதிபதிகள்
9 பேர் மாவட்ட நீதிபதிகள் - ஆர்எம்டி.டீகாராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, டி.ரவிந்திரன், எஸ்.பாஸ்கரன், பி.வேல்முருகன், ஜி.ஜெயசந்திரன், சி.வி.கார்த்திகேயன், பஷீர் அகமது ஆகியோர்.

75 பணியிடம்
தற்போது 75 நீதிபதிகள் பணியிடம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 38 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். புதிதாக 24 பேர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 62 ஆக உயரும். காலி பணியிட எண்ணிக்கை 13 ஆக இருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...