பாம்பு சாபத்தால் படிப்புக்கு தடா'சத்தியமங்கலம் அருகே வினோதம்

பாம்பு சாபத்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என, பெற்றோர் முரண்டு பிடிக்கும் வினோதம், சத்தியமங்கலம் அருகே நடக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொமராபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது நரிக்குறவர் காலனி. இங்கு, 50 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் சென்று தேன், பாசி மணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றனர்.காலனியில், படிக்கும் வயதில், 19 குழந்தைகள் உள்ளன. இவர்கள், அரை கி.மீ., துாரத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., நகர் பள்ளிக்கு கடந்த ஆண்டு சென்றனர். சில நாட்கள் மட்டும் சென்ற குழந்தைகள், பின் பள்ளி பக்கமே வருவதில்லை.



சத்தியமங்கலம் வட்டார வள மைய அதிகாரிகள், நரிக்குறவர் காலனிக்கு சென்று, காலனி தலைவர் பன்குடியிடம், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புமாறு கூறினர்.

அதற்கு தலைவர் உள்ளிட்ட பெற்றோர், 'எங்கள் இனத்தவர்களுக்கு பாம்பு என்பது சாபம். பாம்புக்கும் எங்களுக்கும் ஆகாது. பள்ளிக்கு செல்லும் அரை கி.மீ., துாரம் காட்டு பகுதி. இங்கு பாம்புகள் நடமாட்டம் உள்ளன. பாம்புகளால் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்பது எங்களின் எண்ணம். 

குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. பாம்பு சாபத்தை நினைத்தால் பயமாக உள்ளது. பள்ளியில் குழந்தைகளுக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை. நரிக்குறவர் காலனியிலேயே, ஒரு பள்ளி அமைத்து, ஆசிரியர் நியமனம் செய்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்' என்றனர்.


இதையடுத்து, மாவட்ட குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் சென்று, மீண்டும் நரிக்குறவர் காலனி பெற்றோரிடம் பேசினர். ஆனால், அவர்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...