கல்லூரி மாணவர்கள் ஆதார் பதிவு செய்ய உத்தரவு !

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் ஆதார் எண் அரசின் பல்வேறு மானியங்கள் பெற
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்னை, ரேஷன் கடைகளிலும், வங்களிலும் இணைத்து வருகின்றனர். இந்நிலையில், பல்கலை மானியக்குழுவின் கீழ், பல்வேறு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும், 2017-18 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, ஆக., 8 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஆதார் எண்னை அப்டேட் செய்யவும், விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆதார் எண்ணுடன் விரைந்து விண்ணப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாத மாணவர்கள் குறித்த எவ்வித தகவல்களும் தராததால், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் ஏற்கப்படுமா, நிராகரிக்கப்படுமா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...