கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு விருப்ப மாறுதலை செயல்படுத்த வேண்டும் !

கல்வித் துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப்
பணியாளர்கள் உள்ளிட்டோரை விருப்ப மாறுதல் முறையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு கல்வித் துறை அரசு
அலுவலர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மதுரை செளராஷ்டிர இருபாலர் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள் விவரம்:

மூன்றாண்டுகளுக்கு மேலாக பள்ளிக் கல்வி இயக்ககம் உள்பட அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு பிரிவு மாறுதல் செயல்படுத்தப்பட வேண்டும்.

துப்புரவுப் பணியாளர்களுக்கு பணியமைப்பு விதி வரையறை செய்யவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கல்வித் துறையில் உள்ள

இணை, துணை, உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டதன் அடிப்படையில், அமைச்சுப் பணியாளர்களையும் நியமிக்கவேண்டும். முதன்மைக் கல்வி

அலுவலகங்களில் அமைச்சுப் பணியாளர்களின் நிர்வாகப் பணியினை கவனிக்க நேர்முக உதவியாளர் பணியிடமும் உருவாக்கப்பட வேண்டும். தேர்வுப் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளும் கல்வி

அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு கூடுதல் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு சங்கத்

தலைவர் எம். அதிகமான் முத்து தலைமை வகித்து தீர்மான நகல்களை வெளியிட, பொதுச் செயலர் ஆர். பாலமுருகன் பெற்றுக்கொண்டார். இதில், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு

மாவட்டங்களைச் சேர்ந்த சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக, மதுரை மண்டல மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ரேணுகா,

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவராக இருந்த எஸ்.பி. சுந்தரராஜன், மாநிலப் பொதுச் செயலராகத் தேர்வு பெற்றார். சங்க தலைமை நிலையச் செயலர் கே. விஜயன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...