இணையத்தை பயன்படுத்துபவர்களில் தமிழகம் முதலிடம் !

நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இணைய சேவை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும், நகர் பகுதிகளில், 23.1
கோடி பேரும், கிராமப் பகுதிகளில், 11.2 கோடி பேரும் இணைய சேவையை பெறுகின்றனர்.
நகர் பகுதிகளில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மஹாராஷ்டிராவில், 1.97 கோடி பேரும், டில்லியில், 1.96 கோடி பேரும், இணைய சேவை சந்தாதாரர்களாக உள்ளனர். கர்நாடகாவில், 1.70 கோடி பேர் இணைய சேவையைப் பெறுகின்றனர். கிராமப் பகுதிகளில் இணைய சேவை சந்தாதாரர்கள் கணக்கின்படி, 1.12 கோடி பேருடன் கிழக்கு உத்தர பிரதேச தொலை தொடர்பு வட்டம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், 97 லட்சம் பேரும், ஆந்திராவில், 90 லட்சம் பேரும் இணைய சேவை பெற்று உள்ளனர்.


கிராமப்புற இணைய சேவையை அதிகரிக்கும் வகையில், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைப்புகள் அளிக்கும் பணி நடந்து வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...