ஏழை குழந்தைகளும் ‛படிக்கட்டும்’ என அரசு சொல்வது இது தானா?

சைக்கிள், மடிக்கணினி, ஜாமின்ட்ரி பாக்ஸ், சிற்றுண்டி, மதிய உணவு, எல்லாமே விலையில்லாமல் தருகிறது, இந்த அரசு. ஏழை வீட்டுக் குழந்தைகளும்படிக்கட்டும் என்ற அக்கறையாம்.


ஆனால், படிக்க வேண்டுமென்று பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு, இந்த அரசு தரும் பரிசு படிக்கட்டு பயணம். இளம் வயதிலேயேபலருக்கு, இலவச மரணம். மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகரப் பேருந்துகள் என, பலவிதமான போக்குவரத்தை அரசு ஏற்படுத்தினாலும், காலை, மாலை நேரங்களில், சென்னையில் நகரும் மக்கள் கூட்டத்தை, இந்த அரசால்என்றைக்குமே சமாளிக்க முடியாது.

பட்ஜெட்டில், 2,000 பேருந்துகளைபுதிதாக வாங்குவதாக பெருமிதப் படுகிறது, தமிழக அரசு. அவற்றை வாங்கிவிட்டால் இது போன்ற, &'அபாய&' பயணங்களுக்குமுற்றுப்புள்ளி வைத்து விட முடியுமா? இத்தகைய பயணங்களை, மாணவர்களின் திமிர் என்று ஒற்றை வார்த்தையில் புறக்கணித்து விட முடியாது.


உண்மையில், இது அரசின் தோல்வி.மக்கள் போக்குவரத்தில், சென்னையில் மட்டும் தனியாரை அனுமதிப்பதில்லை என்ற, அர்த்தமற்ற கொள்கையால் ஏற்படும் விபரீத விளைவு. சென்னையிலும், புறநகரிலுமாக அடர்ந்து கிடக்கும் ஒரு கோடிமக்களுக்கு, அரசு தரும் போக்குவரத்து வசதி, ஒரு தெருக்கோடி.

தனிநபர் வாகனங்களும், அதன்தொடர்ச்சியாக போக்குவரத்து நெரிசலும்,விபத்துகளும், மரணங்களும் தொடர்வதற்குக் காரணம், போதிய மக்கள் போக்குவரத்து இல்லாதது தான். ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து, கட்டணத்தை அரசே நிர்ணயித்து, தனியாரை அனுமதித்தால், இந்த அவலக்காட்சிகள், அன்றாடம் நிகழ வாய்ப்பே இல்லை.ஆம்னி பஸ்களை இயக்குவதற்கென்று, எந்த விதிமுறையும் வகுக்காமல், பல பத்தாண்டுகளாக, பல நுாறு கோடி ரூபாய் வருவாயை, தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசு, இதில் மட்டும் முரட்டுத்தனமான பிடிவாதம் காட்டுவதற்குக் காரணம், கொள்கை இல்லை. அப்பட்டமான கொள்ளை.


விலையில்லாமல் எது எதையோ கொடுப்பது இருக்கட்டும், இளம் தலைமுறைக்கு பாதுகாப்பான பயணத்தை எப்போது தரப்போகிறது இந்த அரசு?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...