பி.எஸ்.என்.எல். அன்லிமிடெட் 3 ஜி சேவை அறிமுகம் !

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தங்களது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 3 ஜி சேவையை ரூ.1,099ல் வழங்க பி.எஸ்.என்.எல். முடிவுசெய்துள்ளது.

‘சேவையை மேம்படுத்தியதை அடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை
கவர்ந்துவருகிறது. மேலும் தொலைதொடர்பு நிறுவனங்களில் ரூ.1,099 அன்லிமிடெட் 3 ஜி சேவையை வழங்கும் முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல்.தான்’ என்று, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

‘ட்ராய்’ (Telecom Regulatory Authority of India) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் (11.39 லட்சம் பேர்) கவர்ந்த நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. ஏப்ரல் மாதத்தில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கைத் தொடர்ந்து, ஏர்டெல் (9.78 லட்சம் பேர்), ஏர்செல் (5.72 லட்சம் பேர்), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (1.1 லட்சம் பேர்), வோடஃபோன் (46,000 பேர்), வீடியோகான் நிறுவனத்தின் ஒரு அங்கமான குவாட்ரண்ட் (25,012 பேர்), எம்.என்.டி.எல். (11,591 பேர்) என்றளவில் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளன.

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அதிக சலுகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவருவதால் அவர்களுடன் போட்டிபோடும்விதமாக பி.எஸ்.என்.எல். பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணத்துக்கு, பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் டேட்டா கட்டணங்களை 67% குறைத்தது. அதேபோல, 5ஜி.பி. 3 ஜி சேவையை ரூ.549க்கு வழங்கியது. ஆனால் தற்போது அதே கட்டணத்தில் 5 ஜி.பி.யில் இருந்து 10 ஜி.பி.யாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...