பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தலில் !

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது.
உள்ளாட்சிப் பதவிகளில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிகளை பெறுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள, மாநிலத் தேர்தல் ஆணையர் பி.சீத்தாராமன், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநிலத் தேர்தல் ஆணையர் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலத் தேர்தல் ஆணையர் பி.சீத்தாராமன் பேசுகையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டு குடிநீர், சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, வாக்குப்பதிவுக்கு தயார்படுத்த வேண்டும். மேலும், நகர்ப்புற வாக்குச்சாவடிகளுக்கு தேவைப்படும் மின்னணு வாக்கு இயந்திரம், கிராமப்புற வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதேபோல், பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேவையான காவலர்கள் குறித்த விவரங்கள் அனுப்பப்பட வேண்டும். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் அலுவலர்கள் பெற்று, மாநிலத் தேர்தல் அலுவலகத்துக்கு அறிக்கையாக விரைவில் அனுப்ப வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்கள் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று சீத்தாராமன் கேட்டுக்கொண்டார்.

கடந்த 5ஆம் தேதி, உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...