ஒரே நாளில் இரு அரசுத் தேர்வுகள்: தேர்வு எழுதுபவர்கள் குழப்பம்!

தமிழக அரசின் இரு துறைகள் சார்பில் போட்டி தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வு தேதிகள் ஒரே நாளில் குறுக்கிடுவதால் ஏதாவது ஒரு தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து நாகப்பட்டணத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன் கூறுகையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இளநிலை உதவியாளர் (கணக்கு), டெஸ்டர் கெமிக்கல், கள உதவியாளர் (பயிற்சி), சுருக்கெழுத்தர் – தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு 27ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்/இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு 28ஆம் தேதியும் போட்டி தேர்வு நடைபெற உள்ளது.

அதேபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நீதிபதிகள், நீதிமன்றப் பதிவாளர் ஆகியோரின் நேர்முக உதவியாளர் மற்றும் நீதிமன்ற துணைப் பதிவாளரின் நேர்முக எழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு வரும் 27ஆம் தேதியும், இதே துறையில் கணினி இயக்குவோர், தட்டச்சர், காசாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 28ஆம் தேதியும் போட்டி தேர்வு நடைபெற உள்ளது. இதுதவிர, தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் 27, 28 ஆகிய தேதிகளில் தட்டச்சர் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தட்டச்சர், மின் வாரியத்தின் இளநிலை உதவியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் வருவதால் எந்தத் தேர்வில் பங்கேற்பது என குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு தேதிகளை அரசு மாற்றி அறிவித்தால் விண்ணப்பித்த அனைவருக்கும் உதவியாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...