மாற்று திறனாளி வக்கீல்களுக்கு உதவி !

சட்டம் படித்த மாற்றுத் திறனாளி பட்டதாரிகள், வழக்கறிஞர்களாக பதிவு செய்ய, நிதியுதவி வழங்கும் திட்டத்தை, தொடர அரசு அனுமதி வழங்கி உள்ளது. சட்டம் படித்த, மாற்றுத் திறனாளிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்கான கட்டணம்
செலுத்தவும், புத்தகங்களை வாங்கவும், நிதியுதவி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில், நபர் ஒருவருக்கு, 3,000 ரூபாய் வீதம், 15 பேருக்கு நிதி வழங்க, அரசு அனுமதி வழங்கியது. நடப்பாண்டிலும், இத்திட்டத்தில், 15 பேருக்கு நிதியுதவி வழங்க அனுமதிக்கும்படி, மாற்றுத் திறனாளி துறை கமிஷனர், அரசுக்கு கடிதம் எழுதினார்; அதை ஏற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...