நீட் தேர்வு குளறுபடி – கல்லூரி சேர்க்கையில் நீடிக்கும் குழப்பம்!

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற எல்லா மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாநில
அரசுகள் கவுன்சலிங் நடத்தி 85% சீட்டையும், மத்திய அரசு பொது நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் 15% சீட்டையும் நிரப்பும்.

மாணவர்கள் தேர்வு செய்யாத சீட்களை அந்தந்த மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஒப்படைக்கும். மீதமுள்ள சீட்களுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் கவுன்சலிங் நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 28ஆம் தேதி, மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு எழுத வேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழகம் உள்பட ஆறு மாநில அரசுகள் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றன. மே மாதம் 1ஆம் தேதி மற்றும் ஜூலை மாதம் 24ஆம் தேதி என இரு நாட்கள் நுழைவுத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து 18ஆம் தேதி மத்திய அரசின் மருத்துவக் கவுன்சலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பில் மத்திய அரசின் 15 சதவிகித சீட்களுக்கு மட்டுமே கவுன்சலிங் நடத்தும்.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் 85 சதவிகித சீட்களுக்கான கவுன்சலிங் தொடர்பாக மாநில மருத்துவக்கல்வி இயக்ககங்களை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த அரசுத்துறை கவுன்சலிங் நடத்தும் என்ற தகவலையும் வெளியிட்டது. அதில் தமிழகத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் இந்த கவுன்சலிங்கை நடத்துவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, ‘நீட்’ தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. கவுன்சலிங் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை

இந்நிலையில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உச்சநீதிமன்றம், இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்படி கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதாக விளம்பரப்படுத்தி வருகின்றன. இதனால் தமிழக மாணவர்கள் மட்டுமல்ல, வெளி மாநில மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம், தமிழக மருத்துவ பணிகள் கழக அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்தபோது, ‘தமிழக அரசிடம் இருந்து இதுதொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை’ என்று தெரிவித்தனர். தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியை தொடர்பு கொண்டபோது, ‘மத்திய அரசின் இணையதளத்தில், இடம்பெற்றுள்ள தகவல் தவறானது. எனவே அதை மாற்றச் சொல்லி இருக்கிறோம்’ என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக, தமிழக மருத்துவ கவுன்சில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, ‘எங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சலில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை’ என்றனர். சென்னையில் உள்ள சில நிகர்நிலை பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால், மாணவர்கள் செய்வதறியாமல், குழப்பதிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...