ஸ்மார்ட்ஃபோன்கள் - லித்தினியம் பேட்டரிகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் !

பூஞ்சைகளைப் பயன்படுத்தி, ரீ-சார்ஜபிள் லித்தியம் - அயான் பேட்டரிகளை குறைந்தசெலவில், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் மறுசுழற்சி செய்யும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இம்முறையைக் கொண்டு ஸ்மார்ட்ஃபோன்கள், கார்கள் மற்றும் டேப்ளெட்களின் ரீ-சார்ஜபிள்
பேட்டரிகளை என்றைக்குமே பயன்படுத்திக்கொண்டே இருக்க முடியும். பெரும்பாலான பழைய பேட்டரிகள், மின்னணுக் கழிவுகளாக, நிலநிரப்புதல்களாக மாறுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அதனுள் கிடைக்கப்பெறும் மதிப்புமிக்க பொருட்களையும் பாதிக்கிறது. தற்போது, அமெரிக்காவின் தெற்கு ஃபுளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இயற்கையாகவே பூஞ்சைகளில் நிகழும் மாற்றத்தால் உண்டாகும் கழிவுகளின்மூலம் பேட்டரிகள் மறுசுழற்சிக்கு கோபால்ட் மற்றும் லித்தியம் பெறும் வழியைக் கண்டறிந்துள்ளனர். வெட்டுதல் நடவடிக்கைகளில் இருந்து வரும் கழிவுகளில் சில உலோகங்களைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தில் அனுபவம்கொண்ட ஜெஃப்ரி கன்னிங்ஹம்தான் இந்த யோசனையைத் தெரிவித்தவர். லித்தியம் தேவை வேகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது மற்றும் புதிய லித்தியம் வளச் சுரங்கங்களை நிலையாக வைத்திருப்பது கடினம். ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள் போன்ற பொருட்களின் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பார்த்து பின் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கவனத்தை அதிகமாக இந்தக் கண்டுபிடிப்பில் செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...