வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் பெயர்களை வெளியிட வேண்டாம்: உயர்நீதிமன்றம் !

நீதிமன்றச் செய்திகளில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பெயர்களை வெளியிடக்கூடாது’ என்று அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ‘சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’
என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு 30 நாட்களில் கொள்கை முடிவெடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியாகும் நீதிமன்றச் செய்திகளில் வழக்கறிஞர்கள் பெயர்களும் நீதிபதிகளின் பெயர்களும் இடம் பெறுகின்றன. இது தேவையில்லாத ஒன்று. இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு மறைமுக விளம்பரம் கிடைப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், ‘நீதிமன்ற செய்திகளில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பெயர்களை வெளியிடக்கூடாது. எனவே, வழக்குகளில் நீதிபதியின் பெயரைப் பயன்படுத்தாமல் நீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தலாம்’ என அனைத்து ஊடகங்களுக்கும் உத்தரவிட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டியில் சிறுவர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களின் பெயர் ஆகஸ்ட் 7ஆம் தேதி பல்வேறு செய்தி தாள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இது, அந்த சிறுவர்களை இழிவுபடுத்தும் விதத்திலும் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இருந்ததால் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பிரஸ் கவுன்சில் கவனத்துக்கு தமிழக அரசு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...