30 கால்பந்து மைதான அளவு கொண்டது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, சீனா!!

பீஜிங்30 கால்பந்து மைதான அளவிலானதும், உலகின் மிகப்பெரியதுமான ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.ரேடியோ தொலைநோக்கி

விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் 1994–ம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், தென்மேற்கு சீனாவில், கிஸோ மாகாணத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கியை நிறுவ சீனா முடிவு எடுத்தது.ரூ.1,200 கோடி திட்டம்

இதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த 8 ஆயிரம் பேரை இடம் பெயர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்காக 2 குடியிருப்பு தொகுப்புகளாக 600 அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.அந்தப் பகுதியில் 2011–ம் ஆண்டு, ரேடியோ தொலைநோக்கியை நிறுவும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் ஏராளமான விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்த திட்டத்துக்காக 180 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.1200 கோடி) சீனா முதலீடு செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணி நடந்து இப்போது முடிந்துள்ளது.30 கால்பந்து மைதான அளவு கொண்டது

இந்த ரேடியோ தொலைநோக்கி 500 மீட்டர் விட்டம் (குறுக்களவு) கொண்டது. கிட்டத்தட்ட அது 30 கால்பந்து மைதானங்களை ஒன்றாக பார்ப்பதுபோன்ற பிரமாண்டத்தை தருகிறது. ‘பாஸ்ட்’ என்றழைக்கப்படுகிற இந்த ரேடியோ தொலைநோக்கி, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலை நோக்கி என்ற பெயரை தட்டிச்செல்கிறது.இந்த ரேடியோ தொலைநோக்கியை சீனா நேற்று முறைப்படி தொடங்கி வைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வானியல் வல்லுனர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.நோக்கம் என்ன?

இந்த ரேடியோ தொலைநோக்கி அமைக்கப்பட்டிருப்பதின் நோக்கம் என்ன என்று கேட்டால் அது குறித்து சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கியான் லெய் கூறும்போது, ‘‘பிரபஞ்ச வளர்ச்சி விதிகளை கண்டறிவதுதான் இதன் நோக்கம்’’ என்றார். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய விதத்தை புரிந்துகொள்வதற்கு இந்த ரேடியோ தொலை நோக்கி உதவும் என்கிறார்கள்.வேற்று கிரக வாழ்க்கை

மேலும் நட்சத்திரங்கள், கோள்கள் என பிரபஞ்சம் முழுவதும் சிக்னல்களை பெற இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.இந்த தொலைநோக்கியின் மிக முக்கிய அம்சம், இது வேற்றுக்கிரக வாழ்க்கை பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்பதுதான்.மேலும் ஈர்ப்பு அலைகள் தேடல், நட்சத்திரங்கள், கோள்களில் இருந்து ரேடியோ உமிழ்வுகளை கண்டறிதல், வேற்றுக்கிரக வாழ்வு பற்றிய அறிகுறிகளை கவனித்தல் போன்றவற்றிற்கும் இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொத்தத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கி இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு உலகத்தின் தலைவர் போன்று திகழும் என்பது சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியின் துணைத்தலைவர் ஜெங் ஸியானியனின் கருத்தாக அமைந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...