31 நர்சிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்; போலிகளுக்கு எச்சரிக்கை!!

இப்பட்டியலில், கோவையில், 31 கல்லுாரிகளுக்கு மட்டுமே முறையான அங்கீகாரம் உள்ளது. நர்சிங் கல்லூரிகளை துவக்க தமிழக அரசு, இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் என மூன்று தரப்பால் அனுமதி அளிக்கப்படுகிறது.



ஒரு சில கல்லுாரிகள் ஒரு பாடப் பிரிவுக்கு அங்கீகாரம் பெற்றுவிட்டு, போலியாக பல பிரிவுகளை நடத்துவதாகவும், சில கல்லுாரிகள் அடிப்படை அங்கீகாரம் பெறாமல் செயல்படுவதாகவும் இந்திய நர்சிங் கவுன்சிலிடம் புகார்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.


போதிய விழிப்புணர்வு இன்றி, விளம்பரங்களை நம்பி மாணவர்கள் இதுபோன்ற கல்லுாரிகளை தேர்வு செய்து பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங் பாடப்பிரிவு நடத்த, 2016-17ம் கல்வியாண்டில், 173 கல்லுாரிகளுக்கும், எம்.எஸ்சி., நர்சிங்குக்கு, 84 கல்லுாரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவையில், பி.எஸ்சி., பிரிவுக்கு 19ம், எம்.எஸ்சி., பிரிவுக்கு 12 உட்பட, 31 கல்லுாரிக்கு இப்பாடப்பிரிவுகளை நடத்த அங்கீகாரம் உள்ளது.


பெரும்பாலான நர்சிங் கல்லுாரிகளில், பி.எஸ்சி., முதலாமாண்டு வகுப்புகள் 26ம் தேதி துவங்கவுள்ளன. தொடர்ந்து, எம்.எஸ்சி., வகுப்புகளும் துவங்கப்படவுள்ளது. இதனால், மாணவர்கள் தாங்கள் சேரும் கல்லுாரி அங்கீகாரம் உள்ளதா, பாடப்பிரிவுக்கு அக்கல்லுாரி அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை கட்டாயம் ஆய்வு செய்யவேண்டியது அவசியம் என துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற நர்சிங் கல்லுாரி பேராசிரியை மல்லிகா கூறுகையில்,&'&' நர்சிங் பாடப்பிரிவுகள் நடத்த முறையான அங்கீகாரம் பெறவேண்டும். சில கல்லுாரிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

தமிழகத்தில், 2016-17 கல்வியாண்டின் படி, 257 நர்சிங் கல்லுாரிகளுக்கு மட்டும், பி.எஸ்சி., எம்.எஸ்சி., நர்சிங் பாடப்பிரிவு நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கல்லுாரியில் சேர்ந்து இருந்தாலும், http://www.tamilnadu nursingcouncil.com/ என்ற இணையளத்தில் அங்கீ காரம் குறித்து ஆய்வு செய்யவேண்டியது அவசியம். விளம்பரங்களை கண்டு ஏமாறவேண்டாம் என, இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர்களை எச்சரித்துள்ளது, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...