இன்று விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி 35 !

ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன், 'பி.எஸ்.எல்.வி., - சி 35' ராக்கெட், இன்று விண்ணில் பாய்கிறது.

வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோள், இன்று காலை, 9:12 மணிக்கு, 'பி.எஸ்.எல்.வி., - சி 35' ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, 48.30 மணி நேர, 'கவுன்ட்-டவுண்' நேற்று முன்தினம், காலை, 8:42 மணிக்கு துவங்கியது.



வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன், அமெரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளின், எட்டு செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.



இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் அளித்த பேட்டி: 'ஸ்கேட் சாட் - 1' செயற்கைகோள் விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது. மங்கள்யான் செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் பின் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே, 'மார்க் -2' என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு, வெற்றி கண்டுள்ள நிலையில், டிச., மாதம், அதிக எடை உடைய, செயற்கை கோள்களை சுமந்து செல்லும், 'மார்க் -3' ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...