91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு !

மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.

இ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 91 இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப கிடைத்து


உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 82 இடங்களும்; கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், ஒன்பது இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.




முதலில், கல்லுாரிகளுக்குள் ஒதுக்கீடும், அதன்பின், காலி இடங்களுக்கான கலந்தாய்வும் நடக்கும். இதன் காரணமாக, இன்று நடக்க இருந்த, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு சுயநிதி கல்லுாரியில் இருந்து, மாநிலத்திற்கு, 75 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கின்றன.




செப்டம்பர் 28ல்

இந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரம்பாத, சுயநிதி கல்லுாரியில் உள்ள, 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 440 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, செப்., 28ல், கலந்தாய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...