மொட்ட கடிதாசி' புகார்கள் விசாரிக்க தேவையில்லை !

ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது பெயர் இல்லாமல் புகார் வந்தால், அவற்றை விசாரிக்க தேவையில்லை' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

         கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது புகார்கள் எழுந்தன. இதில் பல புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து இந்த தேர்தலை எந்தவித புகாரும் ஏற்படாத வகையில் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஓட்டுப்பதிவின் போது ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நடத்தை குறித்து புகார் எழுந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் முறையாக விசாரிக்க வேண்டும். அந்த புகார் எழுத்து மூலமாக பெயர், கையெழுத்துடன் இருக்க வேண்டும். விசாரணை அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
பெயர் இல்லாமல் கொடுக்கப்பட்ட புகார்களை விசாரிக்க தேவையில்லை. விருப்பம் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரிக்கலாம் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...