தேர்தல் பார்வையாளர்களாக தமிழக ஐ.ஏ.எஸ்.,கள் !

''உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தை சேர்ந்த, 37 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமன் கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலுக்காக, நகர்புறங்களில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு, நான்கு அலுவலர்களும், ஊரக உள்ளாட்சிகளில், ஒரு ஓட்டுச் சாவடிக்கு, ஏழு முதல் எட்டு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, மாநிலம் முழுவதும் மொத்தமாக, 6.50 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர் பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர்கள், மைக்ரோ அப்சர்வர்கள் எனப்படும், நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்




ஊரக பகுதிகளில், இரண்டு லட்சத்து, 17 ஆயிரத்து, 500 ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படும்; நகர்புறங்களில், 75 ஆயிரத்து, 933 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்




முதல் முறையாக, கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சியில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன




ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகளுக்கு, இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும், 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும், தமிழக ஒதுக்கீடு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்




பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில், வீடியோ எடுக்கவும், 'லேப்டாப் வெப் கேமரா' மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழக உள்ளாட்சி தேர்தலை பார்வையிட, பிற மாநில தேர்தல் கமிஷனர்களும் வர உள்ளனர்

மனுத்தாக்கல் உடனே துவங்கினாலும், மனு தாக்கல் நிறைவு பெற, அக்., 3 வரை, அவகாசம் உள்ளது.

சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகளில், இரண்டாம் கட்டமாக, அக்., 19ல், தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு சீதாராமன் கூறினார்.






மனு தாக்கல் நேரம் மாற்றி அமைப்பு

* உள்ளாட்சி தேர்தலுக்கு, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்

* மனுக்கள் பரிசீலனை, காலை, 10:00 மணிக்கு துவங்கும். ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 மணிக்கு முடியும்




* ஓட்டு எண்ணிக்கை, காலை, 8:30 மணிக்கு துவங்கும்.




11,640 பேர் போட்டியிட தடை

கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட, 11 ஆயிரத்து, 640 வேட்பாளர்கள், தேர்தல் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை. இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு, தேர்தலில் போட்டியிட முடியாதபடி, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
[26/09 6:25 am] Rahseed,VILLUPURAM: 91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு

சென்னை:மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.




இ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 91 இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப கிடைத்து

உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 82 இடங்களும்; கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், ஒன்பது இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.




முதலில், கல்லுாரிகளுக்குள் ஒதுக்கீடும், அதன்பின், காலி இடங்களுக்கான கலந்தாய்வும் நடக்கும். இதன் காரணமாக, இன்று நடக்க இருந்த, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு சுயநிதி கல்லுாரியில் இருந்து, மாநிலத்திற்கு, 75 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கின்றன. 




செப்டம்பர் 28ல்

இந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரம்பாத, சுயநிதி கல்லுாரியில் உள்ள, 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 440 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, செப்., 28ல், கலந்தாய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...