ஆதார்': ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

ஆதார் விபரம் பதிவு செய்ய வருவோரை அலைக்கழித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, உணவு மற்றும் கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.


தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கடைகள் மூலம், மக்களிடம் இருந்து, ஆதார் விபரம் பெறப்படுகிறது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் பதிய, கடைக்கு வருவோரிடம், 'கருவி வேலை செய்யவில்லை' எனக்கூறி, ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.



சென்னையில், சேப்பாக்கம் உட்பட, 12 இடங்களில், கூட்டுறவு ரேஷன் ஊழியர்களுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை பயன்படுத்துவது குறித்து, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.



இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதில், சிலர் தீவிரமாக உள்ளனர்; அதற்கு, ரேஷன் ஊழியர்கள் துணை போகக்கூடாது. 'பாயின்ட் ஆப் சேல் கருவி' இயங்கவில்லை என்றால், உடனே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்; மாற்று கருவி வழங்கப்படும்.



ஆதார் பதிவுக்கு வருவோரை, திருப்பி அனுப்புவதாக புகார் வந்தால், ஊழியர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...