அங்கீகாரமில்லாத படிப்பு:ஐ.எம்.ஏ., மீது புகார்

இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதியின்றி, அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை நடத்துவதாக, இந்திய மருத்துவ சங்கமான, ஐ.எம்.ஏ., மீது புகார் எழுந்துள்ளது.



நாடு முழுவதும் உள்ள, மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு, முறையான ஆய்வுக்குப்பின், எம்.சி.ஐ., அனுமதி அளிக்கிறது. நிறுவனங்கள் நடத்தும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி, இயங்கும் கல்வி நிறுவனங்கள், அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்தும் நிறுவனங்களின் மீதும், எம்.சி.ஐ., நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், ஐ.எம்.ஏ., அனுமதியின்றி, அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை நடத்துவதாக புகார்

எழுந்துள்ளது.




இது குறித்து, டாக்டர் ஒருவர் கூறியதாவது: ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் நடத்தும், பாராமெடிக்கல் சார்ந்த, டிப்ளமோ படிப்புகள், டாக்டர்களுக்கான, 'ஸ்பெஷாலிட்டி' படிப்புகள் அங்கீகாரமற்றவை; இதை முறையாக, பதிவு செய்ய முடியாது.

சில டாக்டர்கள், 'ஸ்பெஷாலிட்டி' சான்றிதழை வைத்து, சிகிச்சை அளிக்கின்றனர். சான்றிதழ் படிப்புக்கும் அங்கீகாரம் பெற வேண்டும். ஐ.எம்.ஏ., அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.




இது குறித்து, ஐ.எம்.ஏ., மாநில செயலர், முத்துராஜன் கூறியதாவது:டாக்டர்களுக்கு, 'பெல்லோஷிப்' எனப்படும் பயிற்சியை மட்டுமே அளிக்கிறோம்; படிப்பில் சேரும் முன், 'இது, அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பு அல்ல' என, கூறுகிறோம். இந்த படிப்பை முடித்து, 'ஸ்பெஷலிஸ்டாக' அறிவித்துக் கொள்வோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.

நர்ஸ் உள்ளிட்ட பணிகளின் தேவையை கருதியே, சில பாராமெடிக்கல் சார்ந்த, டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்கள், தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்ய லாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...