தமிழகத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் CPS திட்டத்தை அமுல்படுத்தக்கூடாது SSTA வல்லுநர் குழுவிடம் வலியுறுத்தல்!!! ( முழு விபரம் )

🌹🌹SSTA மாநில பொறுப்பாளர்கள்  நேற்று (22/09/2016) CPS கருத்துக் கேட்பு வல்லுநர் குழுவை சந்தித்தனர். இச்சந்திப்பில் ...



🔴முதலில் வல்லுநர் குழு சார்பில் CPS -ல் என்னனென்ன பிரச்சனைகள் உள்ளன என வினாவினர்.
அதற்கு SSTA சார்பில்...                             *CPS என்பதே  பிரச்சனை தான் * என கூறியது.

🔴CPS ல் காணப்படுகின்ற *ஒவ்வொரு சாரம்சங்களும் ஊழியர்களை எவ்வாறு பாதிக்கும்*என எடுத்துரைக்கப்பட்டது.

*🔴குறிப்பாக 20, 30 வருடங்கள் ஊழியர்கள் குருவிபோல் சேர்த்த பணத்தையும் ,அரசின் பங்களிப்பையும் PFRDA விடம் ஒப்படைக்கப்படும் போது அவை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது.*

*🔴கடந்த சில வருடங்களில் ஒரே நாளில் ஏற்பட்ட இழப்பு🔴*


 *2008 ஆம் ஆண்டு ஒரே நாளில் 8 லட்சம் கோடியும் 2011-2012 ஆண்டுகளில் 6 லட்சத்து நாற்பதாயிரம் கோடியும்* பங்குச் சந்தைகளில் ஏற்பட்டதை உரிய ஆவணங்களை காட்டி எடுத்தரைத்தது.

🔴எங்கள் ஓய்வு காலம் முழுமைக்கும் சேர்த்த பணம் இப்படி  பங்கு சந்தைகளில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டால் (உலகின் ஏதோ  ஒரு மூலையில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் போதுபோது) இந்திய பங்குச் சந்தைகள்சந்தைகள் SENSEX  அகல பாதாளத்திற்கு சென்று விடுகிறது. இவ்வாறு நஷ்டம் ஏற்பட்டால் ஊழியர்களின் மீதமுள்ள ஓய்வு நாட்கள் நரகத்தில் தள்ளப்படும். அதற்கு ஆதாரம் உலக நாடுகளில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் தற்போதைய  நிலையினை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியதுசுட்டிக்காட்டியது SSTA.

🔴தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து கூறப்பட்டது

*2001-2002ல் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் மாதச் சம்பளம் மொத்த வருவாயில் 16.98% செலவிடப்பட்டுள்ளது.*

*2012-2013 ல் 13.68% செலவிடப்பட்டுள்ளது.                              *இது 20% வரை செலவிடப்படலாம் என நிதி மேலாண்மை காப்பீடு வலியுறுத்தியுள்ளது. அதற்காண ஆதாரங்களை சமர்பிக்கப்பட்டது.*

🔴தற்போதைய அரசிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதற்கு என்ன தீர்வு? என வல்லுநர் குழு வினாவியது ?

CPS திட்டத்தில் தற்போது  தமிழக அரசு சேருமாயின் அரசு ஊழியர்களின் பங்குத் தொகை5000
  கோடியும் அரசின் பங்களிப்பும் சேர்த்து 10ஆயிரம் கோடி உடனடியாக செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் GPF திட்டத்தில் சேரும்போது ஊழியர்களின் பங்குத்தொகை ரூ. 5000 கோடி செலுத்தினால்   போதும் .
                                                                     *இதற்கு  மேலும் நிதி நெருக்கடி ஏற்பட்டால் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட. ரூ. 5000 கோடியை அவரவர் கணக்கில் இருப்பு வைத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் நாங்கள் செலுத்துகின்ற பங்குத்தொகையில் முன்பணம் ( LOAN) பெற்றுக்கொள்கிறோம் என கூறப்பட்டது .

🔴வல்லுநர் குழு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் காலங்களில்...( 10,20 வருடங்கள் கழித்து) ஏஏற்படும் நிதிபற்றாக்குறைக்கு  தீர்வு என்ன என வினாவப்பட்டது ?


🔴SSTA சார்பாக....
தற்போது ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஊதியத்தில் 50% ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது.                                                                                                             *புதிதாக 2003 க்குபின் GPF கணக்கு பெறும் ஊழியர்களுக்கு 40% ஓய்வூதியம் வழங்கினால் போதுமானது.                                                                                                           * மேலும் இன்று குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலை கிடைத்தாலே அறிதாக உள்ளது அதிலும் வேலைப்பலு காரணமாக அனைத்து விதமான நோய்களும் தொற்றிக்கொள்கின்றன ,இதில் மருத்துவச்செலவு ,குழந்தைகள் படிப்புச்செலவு ,வீட்டுவாடகை,போக்குவரத்து என மாதம்தோறும் கடன்வாங்கிதான் குடும்பத்தை நடத்துகிறோம் .எந்த விதமான சேமிப்பும் இல்லாத சூழ்நிலையில்                                                                                                                                       * GPF திட்டத்தை தவிர வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது ,என்றும்  தற்போதைய அரசு அரசு ஊழியர்களுக்கு எதிராக எந்தவித தவறான நடவடிக்கையும் எடுக்காது என்று நம்புகிறோம் என்றும் ,             தாயுள்ளத்தோடும் வல்லுநர்குழுவானது 4.5 லட்சம் ஊழியர்களின் எதிர்கால வாழ்கையை பாதுகாத்திட வேண்டும். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அரசிற்கு ஒரு பலவாய்ந்த இயக்கமாகவும்  தமிழகத்தில் நாங்களும் பிற அரசூழியர்சங்கங்களும் உருவாகும் என வலியுறுத்தப்பட்டது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...