ஈராசிரியர் விடுவிப்பு ,பாடத்திட்டத்தை மாற்றவேண்டும், மாணவர்களுக்கு SHOE,TIE வழங்க கோரிக்கை !!!

22-09-2016 அன்று நமது SSTA இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் CPS வல்லுநர் குழுவினரை சந்தித்து விட்டு, நமது தொடக்கக்கல்வி இயக்குனரை சந்தித்தனர்....

அதில் சில நியாயமான கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதன் விவரம்...

✔ ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும், மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை, ஏற்கனவே பணிநிரவலில் பணிபுரியும் ஆசிரியர்களை பதிலி ஆசிரியர்களாக அனுப்பி உடனடியாக விடுவிப்பு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய இயக்குனர், வருகிற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபின் அதற்கு ஆவண செய்வதாக கூறினார்.


✔SSTA சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் பிப்ரவரி  2016 ல் 20-27 வரை 8 நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பிலிருந்து எந்தவித  பாதிப்பு ஏற்படாதவாறு அனைத்து போராளிகளும் பாதுகாக்கப்பட்டனர். அதில் ஆசிரியர் வருகைப்பதிவேட்டில்  உண்ணாவிரதபோராட்டம், மற்றும் தற்செயல்விடுப்பு ,பிற விடுப்புகள் பதிவுசெய்திருந்தால் அவற்றை மாற்றித்தர கோரப்பட்டது.               அவ்வாறு விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விபரம் தெரிவிக்க  இயக்குநரகத்தில் கோரப்பட்டுள்ளது ,விடுப்பு துய்த்தவர்கள் மாநில  தலைமையை தொடர்புகொள்ளவும்.

✔நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து   ஆசிரியர்களும் , பள்ளிகளில் ஆசிரியர்களில் இல்லாத பட்சத்தில், அனைத்து வகுப்பு மாணவர்களையும்  பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என  கோரப்பட்டது. அதற்கு அரசு கடிதம்  விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

✔தமிழகத்தில் CBSE பாடத்திட்டம்  போல கட்டாயமாக  மாற்ற வேண்டும் என கோரிக்கைவைக்கப்பட்டது . மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் போலவே, SHOE, TIE வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டடது விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம்.

✔பின்னேற்பு கோருவோர் பட்டியல் அரசிடமிருந்து  மூன்று முறை சந்தேகங்கள் கேட்கப்பட்டு  உள்ளது. இயக்குநரகத்தில் இருந்து கடைசியாக 16.06.2016 ல் அரசுக்கு அனுப்பட்டுள்ளது அதைக்கொண்டு அடுத்தமுறை  SSTA மாநில நிர்வாகிகள் சென்னை செல்லுகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வலியுறுத்தப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...