பிப்ரவரியில் ஐந்து மாநிலத் தேர்தல்!!

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 27ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதேபோல் கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய

மாநிலங்களில் மார்ச் 18ஆம் தேதியும், உத்தரகாண்டில் மார்ச் 27ஆம் தேதியும் சட்டசபை பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த ஐந்து மாநிலங்களுக்குமான சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2017 பிப்ரவரி அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அடுத்த ஆண்டு முதல் ரயில்வேக்கு தனி பட்ஜெட் கிடையாது என்றும், மத்திய அரசின் பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டில் பிப்ரவரி 1ஆம் தேதியே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.

தற்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்து வருகிறார். அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 70 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆளும் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடம் கடும் போட்டியை சந்திக்க வேண்டி இருப்பினும், சமாஜ்வாதியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று பாஜக நம்புகிறது. அதே போல் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகளுக்குள் போட்டி ஏற்படும். அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, அந்த கூட்டணி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதற்கு முன்னதாக ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், பட்ஜெட் பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு அணுகியது. அப்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்தம் தேசத்துக்கும் பட்ஜெட் பொருந்தக்கூடியது என்பதால் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...