ரூ.2000 வரை டெபிட்- கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது !!!

 ரூ.2000 வரையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு டெபிட்/கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் சேவை வரி கிடையாது என்ற அறிவிக்கையை அருண் ஜேட்லிநாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யவுள்ளார்.

      பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுக்காக இந்த சேவை வரி விலக்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்படவிருக்கிறது.
நாட்டில் பணத்தட்டுப்பாடு உள்ளதை அருண் ஜேட்லி ஒப்புக் கொண்டுள்ள அதே வேளையில், நிபுணர்களோ மக்களிடமிருந்து திரும்ப பெற்ற நோட்டுகளுக்கான புதிய நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்யும் நடவடிக்கைக்கு மாதங்கள் சில ஆகும் என்று கூறுகின்றனர்.
வியாழனன்று இந்த சேவை வரி விலக்கு அறிவிக்கையை அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இதற்கிடையே ரூ.2000 வரையிலான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பயனாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி வியாழனன்று தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...