ஜூலை 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11 ஆம் தேதி முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் ஜுலை 11-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம், ரயில்வே துறையில் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடுதல், என்பது உள்ளிட்டவை மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையில் அடங்கும்.


வேலை நிறுத்தத்திற்கான அறிவிக்கை ஜூன் 9 ஆம் தேதி வழங்க உள்ளோம். இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித நம்பிக்கையும் ஏற்படவில்லை இந்தப் போராட்டத்தில் வங்கிகள் தவிர மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர் என்றார் கண்ணையா.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...